ரயில் பெட்டியில் பெண் உடல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டாரா
ரயில் பெட்டியில் பெண் உடல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டாரா
ADDED : ஆக 30, 2026 11:25 PM
தார்வாட்: கொல்லாபுராவில் இருந்து தார்வாடுக்கு வந்த ரயில் பெட்டியில், அரை நிர்வாண பெண்ணின் உடல் கிடந்ததால், பரபரப்பான சூழ்நிலை உருவானது.
மஹாராஷ்டிராவின் கொல்லாபுராவில் இருந்து வந்த பயணியர் ரயில், நேற்று காலை தார்வாட் ரயில் நிலையத்தில் நின்றது. பயணியர் கீழே இறங்கி சென்ற பின், ரயில்வே ஊழியர் வழக்கம் போல, ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, ஒரு பெட்டியின் இருக்கையின் கீழே, அரை நிர்வாண கோலத்தில் பெண்ணின் உடல் கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டனர். உடலில் ரத்த காயங்கள் காணப்பட்டன.
தனியாக பயணித்த போது, மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டது.
அந்த பெண் யார், எங்கிருந்து வந்தார்; எந்த இடத்துக்கு பயணம் செய்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ரயில் பெட்டியில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால், தார்வாட் ரயில் நிலையத்தில், சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
