தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி எடுக்கும் வானிலை மையம் தகவல்

 மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி எடுக்கும் வானிலை மையம் தகவல்

 மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி எடுக்கும் வானிலை மையம் தகவல்


ADDED : பிப் 21, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: அடுத்த மாதமான மார்ச் முதல் மே வரை, கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியதாவது:

அடுத்த மாதமான மார்ச் முதல் மே மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும். கேரளா, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில், வழக்கத்தை விட வெப்பநிலை அதிகம் இருக்கும்.

குறிப்பாக கர்நாடகாவின் வடக்கு பகுதிகளில் மார்ச் முதல் மே மாதம் வரை, வெப்பக்காற்று தீவிரமாக வீசும் வாய்ப்புள்ளது.

இப்பகுதிகளுக்கு, 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட, 65 முதல், 75 சதவீதம் வரை அதிகரிக்கும் அறிகுறி தென்படுகிறது.

இந்த மாதத்திலேயே வெப்பத்தின் தாக்கம், படிப்படியாக உயர்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் மார்ச் முதல், மே வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us