ADDED : மார் 15, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
நெலமங்களா: விவசாய நிலத்தில் ஆறு மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. விஷம் வைத்து கொல்லப்பட்டதா என, வனத்துறை விசாரிக்கிறது.
பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே பிலால் நகர் பகுதியில், நேற்று மாலை விவசாய நிலத்தில் ஆறு மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்தனர்.
கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்த பின், ஆறு மயில்களும் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்துவோம் என, வனத்துறையினர் கூறினர்.
