நைஸ் அமைப்புடன் என்ன தொடர்பு: சிவகுமாருக்கு குமாரசாமி கேள்வி
நைஸ் அமைப்புடன் என்ன தொடர்பு: சிவகுமாருக்கு குமாரசாமி கேள்வி
ADDED : ஆக 22, 2026 01:32 AM

பெங்களூரு: ''நைஸ் அமைப்பிற்கும், மாநில அரசுக்கும் என்ன தொடர்பு உள்ளது,'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு நைஸ் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டாம். சுங்கக்கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் நைஸ் நிறுவனத்தின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நைஸ் அமைப்பிற்கும், மாநில அரசுக்கும் என்ன தொடர்பு உள்ளது. சிவகுமார் முதல்வராக பணியாற்றுகிறாரா அல்லது நைஸ் நிறுவனத்தின் உரிமையாளராக பணியாற்றுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. நைஸ் நிறுவனத்தின் மீது அவர் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.
வாகன ஓட்டிகள் யாரும் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டாம். இதற்காக, வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால், யாரும் கட்டணம் செலுத்தாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
