தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பால் விலை உயர்வு எப்போது? அமைச்சரவை கூட்டத்தில் முடிவு என்கிறார் முதல்வர்

 பால் விலை உயர்வு எப்போது? அமைச்சரவை கூட்டத்தில் முடிவு என்கிறார் முதல்வர்

 பால் விலை உயர்வு எப்போது? அமைச்சரவை கூட்டத்தில் முடிவு என்கிறார் முதல்வர்


ADDED : செப் 26, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பால் விலை உயர்வு குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பால் விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தும்படி பால் கூட்டுறவு சங்கத்தினர், முதல்வர் சிவகுமாரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பெங்களூரில் நேற்று முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:

பால் கூட்டுறவு சங்க தலைவர்கள் என்னை சந்தித்து, ஒரு லிட்டர் பாலின் விலையை 10 ரூபாய் உயர்த்த கோரினர். இதில், இரண்டு ரூபாய் சங்கங்களுக்கு வழங்க வேண்டும். தெலுங்கானா, தமிழகம், ஆந்திர மாநிலங்களில் நிலவும் சூழல் குறித்து அறிக்கை பெறப்படும். அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின், அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும்.

தற்போதைய பால் விலையால், தொழிற்சங்கங்கள் நஷ்டத்தை சந் தித்து வருகின்றன. விலை பிரச்னை குறித்து பால் உற்பத்தியாளர்கள் கோபத்தில் உள்ளனர். 50 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள், பால் விலையை உயர்த்த கோரி உள்ளனர்.

பால் கூட்டுறவு சங்கங்களையும் பாதுகாக்க உறுதிபூண்டு உள்ளது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், முதல்வர் சிவகுமாரை, பெங்களூரு பால் கூட்டுறவு சங்க தலைவர் டி.கே.சுரேஷ் சந்தித்து பேசினார்.

பின், சுரேஷ் அளித்த பேட்டி:

மூன்று மாதங்களுக்கு முன் ஏற்பட்ட போரின் காரணமாக, பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. இது விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கிறது.

பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், நான்கு மாதங்களுக்கு முன், பாலின் விலையை உயர்த்தின.

மாநிலத்தில் பால் சங்கங்கள் விலை உயர்வை வலியுறுத்தி, இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தன. இருப்பினும், பெங்களூரில் விவசாயிகள் பெரியளவில் போராட்டம் நடத்தினர். ஒரு லிட்டர் பாலின் விலையை 10 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us