/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓசூர் சாலையை இணைக்கும் மெட்ரோ ரயிலுக்கு எப்போது ஒப்புதல்?
/
ஓசூர் சாலையை இணைக்கும் மெட்ரோ ரயிலுக்கு எப்போது ஒப்புதல்?
ஓசூர் சாலையை இணைக்கும் மெட்ரோ ரயிலுக்கு எப்போது ஒப்புதல்?
ஓசூர் சாலையை இணைக்கும் மெட்ரோ ரயிலுக்கு எப்போது ஒப்புதல்?
ADDED : ஏப் 23, 2025 07:17 AM
பெங்களூரு : தமிழகம் செல்லும் ஓசூர் சாலையை இணைக்கும் சிவப்பு மெட்ரோ ரயில் பாதைக்கு மத்திய அரசு எப்போது ஒப்புதல் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில்களின் பங்கு இன்றியமையாதது. தற்போது, பச்சை, ஊதா பாதைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
மஞ்சள் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிங்க் பாதை அடுத்த ஆண்டிலும்; நீல நிற பாதை 2027ம் ஆண்டிலும், சிவப்பு பாதை 2030ம் ஆண்டுக்குள்ளும் செயல்பாட்டுக்கு வரும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சிவப்பு பாதை திட்டம் 28,405 கோடி ரூபாய் செலவில், சர்ஜாபூர் - ஹெப்பால் வரை 36.59 கி.மீ., துாரத்திற்கு அமைய உள்ளது. இதில் 14.45 கி.மீ., நீளம் சுரங்கப்பாதையாகவும், 22.14 கி.மீ., நீளம் நிலத்திற்கு மேலேயும் அமைய உள்ளது.
இதற்காக, 161.65 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த பாதையில் சர்ஜாபூர், சோமாப்பூர், தொம்மசந்திரா, தொம்மசந்திரா, சோலிகுன்டே, கோடதி கேட், அம்பேத்கர் நகர், கார்மேலரம், தொட்டகன்னெள்ளி, கை கொண்டரஹள்ளி, பெல்லந்துார் கேட், இப்பலுார், அகரா, ஜக்கசந்திரா, சி.பி.டபிள்யூ.டி., குடியிருப்பு, செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை, சுத்தகுன்டே பாளையா, டெய்ரி சதுக்கம், நிமான்ஸ், வில்சன்கார்டன், டவுன்ஹால், கே.ஆர்.சதுக்கம், சாளுக்கியா சதுக்கம், பேலஸ் குட்டஹள்ளி, மேக்ரி சதுக்கம், கால்நடை மருத்துவமனை கல்லுாரி, கங்கா நகர், ஹெப்பால் என 28 நிலையங்கள் அமைய உள்ளன.
இதன் மூலம் பெங்களூரு மையப்பகுதியில் இருந்து, சுற்றுபுறத்தில் உள்ள பகுதிகளை இணைக்க முடியும். இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, ஓசூர் சாலை, பெங்களூரு நகரத்தின் மையப்பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு நடந்த முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

