/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்மிருதி இரானி எங்கே? அமைச்சர் லட்சுமி கேள்வி
/
ஸ்மிருதி இரானி எங்கே? அமைச்சர் லட்சுமி கேள்வி
ADDED : மார் 12, 2026 05:31 AM

பெங்களூரு: சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவிக்காமல், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காணாமல் போய் விட்டதாக, கர்நாடக பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கிண்டல் அடித்து உள்ளார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் சமையல் காஸ் சிலிண்டர் விலை 10, 20 ரூபாய் உயர்த்தப்பட்ட போது, காஸ் சிலிண்டரை தலையில் வைத்து போராட்டம் நடத்திய, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தற்போதைய சிலிண்டர் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவிக்காமல் காணாமல் போய் விட்டார்.
ஈரான் - இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நமக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் உள்ளிட்ட மூல பொருட்கள் வரவில்லை. ஹோட்டல்களில் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு விழித்து கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

