/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் வங்கிக்கு எடுத்து சென்றபோது... ரூ.7 கோடி கொள்ளை! பட்டப்பகலில் கைவரிசை காட்டிய 8 பேர் கும்பல்
/
பெங்களூரில் வங்கிக்கு எடுத்து சென்றபோது... ரூ.7 கோடி கொள்ளை! பட்டப்பகலில் கைவரிசை காட்டிய 8 பேர் கும்பல்
பெங்களூரில் வங்கிக்கு எடுத்து சென்றபோது... ரூ.7 கோடி கொள்ளை! பட்டப்பகலில் கைவரிசை காட்டிய 8 பேர் கும்பல்
பெங்களூரில் வங்கிக்கு எடுத்து சென்றபோது... ரூ.7 கோடி கொள்ளை! பட்டப்பகலில் கைவரிசை காட்டிய 8 பேர் கும்பல்
ADDED : நவ 20, 2025 03:37 AM
பெங்களூரில் வங்கிக்கு எடுத்து சென்றபோது... பட்டப்பகலில் கைவரிசை காட்டிய 8 பேர் கும்பல்
பெங்களூரு: பெங்களூரில், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு வேனில் எடுத்து சென்ற, 7.11 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, பட்டப்பகலில் கைவரிசை காட்டிய எட்டு பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ஜே.பி.நகரில் ஹெச்.டி.எப்.சி., வங்கி உள்ளது. இந்த வங்கியின் கிளை ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் அமைந்து உள்ளது. நேற்று மதியம் 12:20 மணிக்கு ஜே.பி.நகர் வங்கியில் இருந்து, 7.11 கோடி ரூபாயுடன், சி.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன், ஹெச்.பி.ஆர்., லே - அவுட் கிளைக்கு புறப்பட்டது.
* 'டிப்டாப்' உடை
மதியம் 1:00 மணிக்கு அசோகா சதுக்கம் பகுதியில் வாகனம் சென்ற போது, வேனை பின்தொடர்ந்து வந்த இன்னோவா கார் திடீரென, வாகனத்தின் முன் நின்றது. அந்த காரின் பின்பக்க கண்ணாடியில், 'கவர்மென்ட் ஆப் இந்தியா' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
காரில் இருந்து டிப்டாப் உடை அணிந்து இறங்கிய எட்டு பேர், வேனில் இருந்த டிரைவர், இரண்டு கன்மேன்கள், நிறுவன ஊழியர்களிடம் பேசினர். 'நாங்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள். இந்த வேனில் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக, எங்களுக்கு தகவல் வந்து உள்ளது' என்று கூறினர். பின், வேனில் இருந்த கன்மேன்கள், நிறுவன ஊழியர்களை கீழே இறங்கும்படி கூறினர்.
'நாங்கள் சித்தாபுரா போலீஸ் நிலையத்திற்கு செல்கிறோம். எங்களை பின்தொடர்ந்து நீ மட்டும் வேனை ஓட்டி வர வேண்டும்' என்று, வேன் டிரைவரிடம் கூறினர். அதன்படி, இன்னோவா காரை பின்தொடர்ந்து, வேனை டிரைவர் ஓட்டி சென்றார்.
ஓசூர் சாலையில் உள்ள கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு அலுவலக பகுதியில் உள்ள, டெய்ரி சதுக்கம் மேம்பாலத்தின் நடுப்பகுதியில் சென்ற போது, இன்னோவா கார் நிறுத்தப்பட்டது. கார் நின்றதால், வேனை டிரைவரும் நிறுத்தினார்.
* போலி பதிவெண்
காரில் இருந்து இறங்கியவர்கள், டிரைவரை மிரட்டி வேனின் பின்பக்க கதவை திறந்து, பணம் இருந்த பெட்டிகளை இன்னோவா காரில் ஏற்றிக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இதுபற்றி சக ஊழியர்களுக்கும், சித்தாபுரா போலீசாருக்கும், வேன் டிரைவர் தகவல் கொடுத்தார். சித்தாபுரா போலீசார், தெற்கு மண்டல டி.சி.பி., லோகேஷ், தென்கிழக்கு மண்டல டி.சி.பி., சாரா பாத்திமா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கே.ஏ. 03 என்.சி. 8052 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா காரில் கொள்ளையர்கள் வந்தது தெரிந்தது. அந்த பதிவெண்ணை வைத்து விசாரித்த போது, திப்பசந்திராவில் வசிக்கும் கங்காதர் என்பவருக்கு சொந்தமான ஸ்விப்ட் காரின் நம்பர் என்று தெரிந்தது. இதனால் போலி பதிவெண்ணை, கொள்ளையர்கள் பயன்படுத்தியதும் தெரிந்தது.
* ஓல்டு மெட்ராஸ் சாலை
இதையடுத்து காரின் பதிவெண்ணை வைத்து, கார் எங்கெங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க, கட்டுப்பாட்டு மையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் டெய்ரி சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட கார், கோரமங்களா, சோனி வேர்ல்டு சந்திப்பு, டொம்லுார், மாரத்தஹள்ளி, ஒயிட்பீல்டு வழியாக ஹொஸ்கோட் நோக்கி சென்றது தெரிந்தது.
ஹொஸ்கோட்டில் இருந்து ஓல்டு மெட்ராஸ் சாலையில் சென்றால், தமிழகம் அல்லது ஆந்திராவுக்கு சென்று விட முடியும் என்பதால், எல்லை பகுதியில் சோதனையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்கள் கார்களை மாற்றி, மாற்றி தப்பி செல்லும் வாய்ப்பு இருந்ததால், நகருக்குள் வலம் வரும் அனைத்து கார்களையும் சோதனைக்கு உட்படுத்தும்படியும் உத்தரவிடப்பட்டது. கொள்ளையர்களை கைது செய்ய, டி.சி.பி., லோகேஷ் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
* வேன் டிரைவர் கைது
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், ''கொள்ளை நடந்த உடனேயே தகவல் கொடுக்காமல், சிறிது நேரம் கழித்து தான் தனியார் நிறுவன ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். எங்களுக்கு அவர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம்,'' என்றார்.
சந்தேகத்தின் அடிப்படையில் வேன் டிரைவரை, சித்தாபுரா போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்படி ஆறு பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அவர்களை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படியும் கூறி உள்ளனர்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''ஏ.டி.எம்., வேனை மறித்து 7.11 கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்கள் பற்றி தகவல் தெரியவந்துள்ளது. விரைவில் கைது செய்யப்படுவர். இச்சம்பவம் நடந்திருக்க கூடாது,'' என்றார்.
=========
பாக்ஸ்... 1
திட்டமிட்ட கொள்ளை
நன்கு திட்டமிட்டே 7.11 கோடி ரூபாயை கொள்ளையடித்தது தெரிந்து உள்ளது. ஜே.பி.நகரில் இருந்து பணத்துடன் வேன் புறப்பட்டதும் பின்தொடர்ந்து வந்துள்ளனர். டெய்ரி சதுக்க மேம்பால பகுதியில், கண்காணிப்பு கேமரா இல்லை என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்து உள்ளனர்.
மேம்பாலத்தின் நடுப்பகுதியில் வேனை மடக்கினால், மேம்பாலத்தில் வேகமாக செல்லும் எந்த வாகனங்களும் நிற்காது; எளிதில் கொள்ளையடித்து விடலாம் என்று பக்காவாக திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் வேன் புறப்பட்ட நேரம் குறித்து, வங்கி ஊழியர்கள் யாராவது தகவல் கொடுத்து இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
============
கேமரா காட்சிகள்
அசோகா சதுக்கம் பகுதியில் இன்னோவா கார் முன் செல்வதும், அதன்பின் வேன் செல்வதும் அப்பகுதி வீட்டில் உள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சிகளை வைத்து விசாரிக்க, போலீசார் தயாராகி வருகின்றனர். கொள்ளை நடந்த நேரத்தில் அந்த இடம், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த மொபைல் போன் நம்பர்களை வைத்து, அந்த நேரத்தில் சென்ற அழைப்புகள் பற்றியும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
===========
மொபைல் போன்கள் பறிப்பு
சி.எம்.எஸ்., நிறுவன அதிகாரி நடராஜ் கூறுகையில், ''ஜே.பி.நகர் வங்கியில் இருந்து மதியம் 12:20 மணிக்கு, பணத்துடன் வேன் புறப்பட்டது. அசோகா சதுக்கம் பகுதியில் காரில் வந்தவர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி உள்ளனர். எங்கள் ஊழியர்களிடம் இருந்த மொபைல் போன்களை வாங்கி கொண்டனர்.
டிரைவரை மட்டும் வேனை ஓட்டி வரும்படி கூறி இருக்கின்றனர். டெய்ரி சதுக்கம் பகுதியில் வந்ததும், பணத்தை கொள்ளையடித்து தப்பி உள்ளனர். இதை யார் செய்தனர் என்று தெரியவில்லை. முன்னாள் ஊழியர்கள் யாராவது திட்டமிட்டு செய்தனரா என்று தெரியவில்லை. போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவரும்,'' என்றார்.
==============
அரசு செத்து விட்டது
எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''பெங்களூரில் 7.11 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. பீதர், மங்களூரிலும் இதுபோன்று கொள்ளை நடந்தது. சிறையில் இருக்கும் பயங்கரவாதி கையில் மொபைல் போன் கொடுத்தவர்கள், கொள்ளை அடிப்பவர்களுக்கும் ஆதரவாக உள்ளனர்.
''பெங்களூரு போன்ற நகரில் பட்டப்பகலில் கொள்ளை நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இது எப்படி சாத்தியம் ஆனது. இந்த அரசு செத்து விட்டது. வங்கி பணத்திற்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்கள் பணத்திற்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும். பணியிட மாற்றம் மூலம் பணம் சம்பாதிப்பதில் தான், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பிசியாக உள்ளார்,'' என்றார்.
***
பெங்களூரு, நவ. 20- பெங்களூரில், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு வேனில் எடுத்து சென்ற, 7.11 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, பட்டப்பகலில் கைவரிசை காட்டிய எட்டு பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு ஜே.பி.நகரில் ஹெச்.டி.எப்.சி., வங்கி உள்ளது. இந்த வங்கியின் கிளை ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் அமைந்து உள்ளது. நேற்று மதியம் 12:20 மணிக்கு ஜே.பி.நகர் வங்கியில் இருந்து, 7.11 கோடி ரூபாயுடன், சி.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன், ஹெச்.பி.ஆர்., லே - அவுட் கிளைக்கு புறப்பட்டது.
டிப்டாப்' உடை மதியம் 1:00 மணிக்கு அசோகா சதுக்கம் பகுதியில் வாகனம் சென்ற போது, வேனை பின்தொடர்ந்து வந்த இன்னோவா கார் திடீரென, வாகனத்தின் முன் நின்றது. அந்த காரின் பின்பக்க கண்ணாடியில், 'கவர்மென்ட் ஆப் இந்தியா' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
காரில் இருந்து டிப்டாப் உடை அணிந்து இறங்கிய எட்டு பேர், வேனில் இருந்த டிரைவர், இரண்டு கன்மேன்கள், நிறுவன ஊழியர்களிடம் பேசினர். 'நாங்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள். இந்த வேனில் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக, எங்களுக்கு தகவல் வந்து உள்ளது' என்று கூறினர். பின், வேனில் இருந்த கன்மேன்கள், நிறுவன ஊழியர்களை கீழே இறங்கும்படி கூறினர்.
'நாங்கள் சித்தாபுரா போலீஸ் நிலையத்திற்கு செல்கிறோம். எங்களை பின்தொடர்ந்து நீ மட்டும் வேனை ஓட்டி வர வேண்டும்' என்று, வேன் டிரைவரிடம் கூறினர். அதன்படி, இன்னோவா காரை பின்தொடர்ந்து, வேனை டிரைவர் ஓட்டி சென்றார்.
ஓசூர் சாலையில் உள்ள கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு அலுவலக பகுதியில் உள்ள, டெய்ரி சதுக்கம் மேம்பாலத்தின் நடுப்பகுதியில் சென்ற போது, இன்னோவா கார் நிறுத்தப்பட்டது. கார் நின்றதால், வேனை டிரைவரும் நிறுத்தினார்.
போலி பதிவெண் காரில் இருந்து இறங்கியவர்கள், டிரைவரை மிரட்டி வேனின் பின்பக்க கதவை திறந்து, பணம் இருந்த பெட்டிகளை இன்னோவா காரில் ஏற்றிக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இதுபற்றி சக ஊழியர்களுக்கும், சித்தாபுரா போலீசாருக்கும், வேன் டிரைவர் தகவல் கொடுத்தார். சித்தாபுரா போலீசார், தெற்கு மண்டல டி.சி.பி., லோகேஷ், தென்கிழக்கு மண்டல டி.சி.பி., சாரா பாத்திமா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கே.ஏ. 03 என்.சி. 8052 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா காரில் கொள்ளையர்கள் வந்தது தெரிந்தது. அந்த பதிவெண்ணை வைத்து விசாரித்த போது, திப்பசந்திராவில் வசிக்கும் கங்காதர் என்பவருக்கு சொந்தமான ஸ்விப்ட் காரின் நம்பர் என்று தெரிந்தது. இதனால் போலி பதிவெண்ணை, கொள்ளையர்கள் பயன்படுத்தியதும் தெரிந்தது.
இதையடுத்து காரின் பதிவெண்ணை வைத்து, கார் எங்கெங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க, கட்டுப்பாட்டு மையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் டெய்ரி சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட கார், கோரமங்களா, சோனி வேர்ல்டு சந்திப்பு, டொம்லுார், மாரத்தஹள்ளி, ஒயிட்பீல்டு வழியாக ஹொஸ்கோட் நோக்கி சென்றது தெரிந்தது. ஹொஸ்கோட்டில் இருந்து ஓல்டு மெட்ராஸ் சாலையில் சென்றால், தமிழகம் அல்லது ஆந்திராவுக்கு சென்று விட முடியும் என்பதால், எல்லை பகுதியில் சோதனையை தீவிரப்படுத்தினர்.
கொள்ளையர்கள் கார்களை மாற்றி, மாற்றி தப்பி செல்லும் வாய்ப்பு இருந்ததால், நகருக்குள் வலம் வரும் அனைத்து கார்களையும் சோதனைக்கு உட்படுத்தும்படியும் உத்தரவிடப்பட்டது. கொள்ளையர்களை கைது செய்ய, டி.சி.பி., லோகேஷ் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
வேன் டிரைவர் கைது பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், ''கொள்ளை நடந்த உடனேயே தகவல் கொடுக்காமல், சிறிது நேரம் கழித்து தான் தனியார் நிறுவன ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். எங்களுக்கு அவர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம்,'' என்றார்.
சந்தேகத்தின் அடிப்படையில் வேன் டிரைவர் வினோத், 45, என்பவரை பிடித்து சித்தாபுரா போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்படி ஆறு பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அவர்களை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படியும் கூறி உள்ளனர்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''ஏ.டி.எம்., வேனை மறித்து 7.11 கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்கள் பற்றி தக வல் தெரியவந்துள்ளது. கைது செய்யப்படுவர். இச்சம்பவம் நடந்திருக்க கூடாது,'' என்றார்.

