UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 06:47 PM

– நமது நிருபர் –
சிக்கன், மட்டன் பிரியாணியை வீட்டில் அடிக்கடி செய்து சாப்பிட்டு இருப்போம். இந்த பிரியாணி மஞ்சள் நிறத்தில் இருக்கும். சற்று வித்தியாசமாக சீரக சம்பா அரிசியை வைத்து, வீட்டில் வெள்ளை பிரியாணி செய்து சாப்பிட்டு பார்க்கலாமே...
தேவையான பொருட்கள்
l மீல் மேக்கர் – ஒரு கப்
l சின்ன வெங்காயம் – ஒரு கப்
l பச்சை மிளகாய் – ஐந்து
l இஞ்சி – ஒரு துண்டு
l பூண்டு – ஐந்து பல்
l சோம்பு – ஒரு டீஸ்பூன்
l மிளகு – ஒரு டீஸ்பூன்
l பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ – தலா ஒன்று
l பெரிய வெங்காயம் – ஒன்று
l புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
l தயிர் – அரை கப்
l உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
l தேங்காய் பால் – இரண்டு கப்
l சீரக சம்பா அரிசி – ஒரு கப்
l எலுமிச்சை பழம் – ஒன்று
செய்முறை
மிக்ஸி ஜாரில் தோல் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த கலவையை மீல் மேக்கருடன் சேர்த்து உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்து கொள்ளவும்.
அடுப்பை, ஆன் செய்து குக்கர் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, தோல் சீவி நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும், கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து வதக்கவும். பின், தயிருடன் சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். தேங்காய் பால் ஊற்றி கிளற வேண்டும்.
இந்த கலவை, பதத்திற்கு வந்ததும் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து, இரண்டு விசில் விட்டு இறக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான, சுவையான சீரக சம்பா வெள்ளை பிரியாணி தயார். இதற்கு சைடு டிஷ் கூட தேவைப்படாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
