/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., தோல்வி ஏன்? அமைச்சர் சதீஷ் 'பளிச்'
/
காங்., தோல்வி ஏன்? அமைச்சர் சதீஷ் 'பளிச்'
ADDED : நவ 16, 2025 11:19 PM

பெலகாவி: ''பீஹார் தேர்தலில் சரியான வியூகம் வகுக்காததே தோல்விக்கு காரணம்,'' என பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தும் வரை எனது சந்தேகம் தொடரும். பீஹார் தேர்தலில் காங்கிரஸ் சரியான வியூகம் வகுக்கவில்லை.
அதனால் தான், தேர்தலில் மோசமான தோல்வியை அடைந்து உள்ளோம். தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பானதே.
முதல்வர் சித்தராமையா, டில்லியில் ராகுலிடம் பேசியது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து முதல்வரிடம் கேட்டால் தான் உண்மை தெரியும். அமைச்சரவை மாற்றம் எனது கைகளில் எதுவும் இல்லை. கித்துார் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில், மான்கள் நோயால் இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்து உள்ளது. அதிகாரிகளின் அலட்சியம் காரணம் என தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டில்லியில் மாநில அரசியல் குறித்து விவாதிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து மக்கள் விவாதிக்க உரிமை உண்டு. விவாதத்திற்கு முடிவு என்பது கிடையாது. முதல்வர் மாற்றம் குறித்த கேள்விகள் பல முறை கேட்கப்படுகின்றன. இது கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவு.
அதுவரை அனைவரும் அமைதியாகவே இருக்க வேண்டும். தனி மாநில கோரிக்கை என்பது எம்.எல்.ஏ., ராஜுவின் தனிப்பட்ட கருத்து. இதற்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

