sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 2வது கணவரை கொன்று மாரடைப்பு நாடகம் மனைவியும், மூன்றாவது கணவரும் கைது

/

 2வது கணவரை கொன்று மாரடைப்பு நாடகம் மனைவியும், மூன்றாவது கணவரும் கைது

 2வது கணவரை கொன்று மாரடைப்பு நாடகம் மனைவியும், மூன்றாவது கணவரும் கைது

 2வது கணவரை கொன்று மாரடைப்பு நாடகம் மனைவியும், மூன்றாவது கணவரும் கைது


ADDED : மார் 06, 2026 05:19 AM

Google News

ADDED : மார் 06, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: துமகூரு மாவட்டம், ஹெப்பூர் பேரூராட்சியின் தாசரஹள்ளியில் வசித்தவர் பரமேஷ், 45. இவரது மனைவி ஆஷா, 35. ஜனவரி, 30ம் தேதியன்று, பரமேஷ் திடீரென இறந்தார்.

அவர் மாரடைப்பால் இறந்ததாக, அக்கம், பக்கத்தினர், உறவினர்களிடம் மனைவி கூறினார். அதன்பின் இறுதி சடங்குகள் நடந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கணவர் இறந்த, 19 நாட்களில், ஆஷா, சந்திரப்பா என்பவரை மறுமணம் செய்தார். இது, கிராமத்தினருக்கும், உறவினர்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தன் சகோதரர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, ஹெப்பூர் போலீஸ் நிலையத்தில் பரமேஷின் தங்கை புகார் அளித்தார். போலீசாரும் நீதிமன்ற அனுமதியுடன், பரமேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பரிசோதனை அறிக்கையில் அவர் மாரடைப்பால் இறக்கவில்லை. கழுத்து நெரிக்கப்பட்டு, மூச்சுத்திணறி இறந்ததாக கூறப்பட்டது. அதன்பின், ஆஷாவையும், அவர் புதிதாக திருமணம் செய்த சந்திரப்பாவையும் தீவிரமாக விசாரித்த போது, பரமேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், ஆஷா கேட்டரிங் பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சந்திரப்பாவின் அறிமுகம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. தன் கணவரை கொடுமைப்படுத்த துவங்கினார். பரமேஷும் கூட ஆஷாவுக்கு இரண்டாவது கணவர். முதல் கணவரை விட்டு பிரிந்து பரமேஷை திருமணம் செய்தார். சந்திரப்பாவின் அறிமுகம் கிடைத்த பின், இவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஜனவரி, 30ம் தேதியன்று, கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, சந்திரப்பாவை வீட்டுக்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பரமேஷை, கழுத்தை நெரித்தும், தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும், கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ஆஷாவும், சந்திரப்பாவும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us