/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரின் முன்னாள் காதலியால் மனைவி துாக்கிட்டு தற்கொலை
/
கணவரின் முன்னாள் காதலியால் மனைவி துாக்கிட்டு தற்கொலை
கணவரின் முன்னாள் காதலியால் மனைவி துாக்கிட்டு தற்கொலை
கணவரின் முன்னாள் காதலியால் மனைவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 18, 2025 03:11 AM

ஹூப்பள்ளி : கதக் மாவட்டம், ஷிரஹட்டி தாலுகாவின், ஹொளே இடகி கிராமத்தில் வசித்தவர் ஜெயஸ்ரீ படிகேர், 31. இவர் பி.ஏ., - பி.இ.டி., பட்டதாரி. ஆசிரியை ஆக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. இவருக்கும், ஹூப்பள்ளி நகரின் நந்தகோகுலா லே - அவுட்டில் வசிக்கும் சிவானந்த படிகேர், 36, என்பவருக்கும் நடப்பாண்டு மே 21ம் தேதி, ஆடம்பரமாக திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின், தார்வாடில் லைப்ரரி சைன்ஸ் படிக்க, கல்லுாரியில் சேர்ந்தார். தினமும் ஹூப்பள்ளியில் இருந்து, கல்லுாரிக்கு சென்று வந்தார். ஜெயஸ்ரீயின் கணவர் சிவானந்த படிகேர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் திருமணத்துக்கு முன், வேறு பெண்ணை காதலித்தார். இந்த விஷயத்தை மூடி மறைத்து, திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் பழைய காதலியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், ஜெயஸ்ரீக்கு போன் செய்து, பழை ய காதலி விஷயத்தை கூறினார். சிவானந்த படிகேருடன் நெருக்கமாக இருக்கும் படங்களையும் அனுப்பினார்.
இது குறித்து மனைவி, கணவரிடம் கேட்டார். இதனால் தம்பதிக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் மனைவி மனம் வருந்தி தன் தாய் வீட்டுக்கு சென்றார்.
அதன்பின் மனம் மாறி கணவரின் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
ஆனால் சிவானந்த படிகேரின் போக்கு மாறியது; மனைவியை இம்சித்தார். தாய் வீட்டுக்கு செல்ல விடவில்லை. பெற்றோருடன் பேசவும் விடவில்லை. இதே காரணத்தால் நேற்று முன் தினமும், தம்பதிக்கிடையே தகராறு நடந்தது.
இதனால் மனம் நொந்த ஜெயஸ்ரீ, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கவனித்த கணவர், மனைவியின் குடும்பத்தினருக்கு, சிவானந்த படிகர் போன் செய்து உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதை பெற்றோர் நம்ப வில்லை. தங்கள் மகளை சிவானந்த படிகேர், அடித்து கொலை செய்துள்ளதாக புகார் அளி த்தனர். இதன்படி கோகுல் சலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சிவானந்த படிகேரா கைது செய்யப் பட்டார்.

