/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரின் கள்ளத்தொடர்பால் மனைவி தீக்குளித்து தற்கொலை
/
கணவரின் கள்ளத்தொடர்பால் மனைவி தீக்குளித்து தற்கொலை
கணவரின் கள்ளத்தொடர்பால் மனைவி தீக்குளித்து தற்கொலை
கணவரின் கள்ளத்தொடர்பால் மனைவி தீக்குளித்து தற்கொலை
ADDED : அக் 09, 2025 11:02 PM
சிக்கபல்லாபூர்: கணவரின் கள்ளத்தொடர்பால் மனம் நொந்து, இளம் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், குடிபன்டே தாலுகாவின், கொன்டப்பனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர், 30. இவரது மனைவி ஜெயஸ்ரீ, 25.
நான்கு மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை, ஜெயஸ்ரீ தெரிந்து கொண்டார்.
எந்நேரமும் கள்ளக்காதலிக்கு மெசேஜ் அனுப்புவது, சாட்டிங் செய்வதில் சந்திரசேகர் ஆர்வமாக இருந்தார். இதை தட்டிக்கேட்ட ஜெய்ஸ்ரீயை அடித்து, சித்ரவதை செய்தார். நேற்று முன்தினமும், இதே விஷயமாக தம்பதிக்குள் வாக்குவாதம் நடந்தது.
கணவரின் செயலால் மனம் நொந்த மனைவி, நேற்று காலை தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த குடிபன்டே போலீசார், உடலை மீட்டனர்.
தற்கொலைக்கு முன்பு,ஜெயஸ்ரீ எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்ய வேண்டுமே தவிர, வெறுப்போடு திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
என் கணவர் எப்போதும் மொபைல் போனில் சாட்டிங் செய்கிறார். மெசேஜ் அனுப்புகிறார். யாருக்கு அனுப்புகிறீர்கள் என, நான் கேட்டால், நண்பர் என்கிறார்.
என்னதான் நெருங்கிய நண்பர் என்றாலும், எப்போதும் சாட்டிங் செய்ய, மெசேஜ் அனுப்ப என்ன இருக்கிறது? இதை நான் தட்டிக்கேட்டால், கோபப்படுகிறார். என்னை அவருக்கு பிடிக்கவில்லை. திருமணத்துக்கு பின்னர் தான், எனக்கு அது தெரிந்தது.
தெரிந்தபோது மனம் நொந்தேன். கணவருக்கும், அவரது காதலிக்கு நடுவே நான் இருக்க விரும்பவில்லை. இவர்களின் தொடர்பு குறித்து, என் பெற்றோருக்கும் தெரியவில்லை.
இவ்வாறு கடிதத்தில் ஜெயஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்திரசேகரை விசாரிக்கின்றனர்.