ADDED : ஆக 01, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், கைதான நடிகர் தர்ஷன், ஓராண்டுக்கும் மேலாக பெங்களூரின் பரப்பன அக்ரஹரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4:00 மணிக்கு இவரது மனைவி விஜயலட்சுமி, சிறைக்கு வந்தார். முறைப்படி அனுமதி பெற்று, சிறைக்குள் சென்று தர்ஷனை சந்தித்தார்.
கணவருக்காக கொண்டு வந்த பழங்கள், தின்பண்டங்களை கொடுத்தார். 5:30 மணி வரை கணவரும், மனைவியும் பேசினர்.
பின், விஜயலட்சுமி சிறையில் இருந்து வெளியேறினார்.
