ADDED : ஜூன் 20, 2025 11:27 PM
ராம்நகர்: வரதட்சணைக்காக மனைவியை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவில் வசிப்பவர் அனில்குமார், 37, ஓட்டுநர். இவரது மனைவி அஸ்வினி, 33. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
அனில்குமார் வரதட்சணை கேட்டு, மனைவியை துன்புறுத்தினார். 2020 மே 14ம் தேதியன்று, மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். ஆனால் போலீஸ் விசாரணையில், கொலை என்பது தெரிந்தது.
அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்தி, அனிலே கொலையாளி என்பதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார், கனகபுரா இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் அனிலின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 3.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி குமார், நேற்று தீர்ப்பளித்தார்.