/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனியாக இருந்தபோது கொள்ளை கணவர் மீது மனைவி சந்தேகம்
/
தனியாக இருந்தபோது கொள்ளை கணவர் மீது மனைவி சந்தேகம்
தனியாக இருந்தபோது கொள்ளை கணவர் மீது மனைவி சந்தேகம்
தனியாக இருந்தபோது கொள்ளை கணவர் மீது மனைவி சந்தேகம்
ADDED : டிச 12, 2025 06:50 AM
சிக்கபல்லாபூர்: பெண் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களின் வீட்டில் அவ்வளவு நகைகள் இருக்கவில்லை என, அவரது கணவரும், பிள்ளைகளும் கூறுகின்றனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவின் இலாஹி நகரில் வசிப்பவர் முபாரக், 45. மற்றும் குடும்பத்தினர் அஜ்மீர் சென்று உள்ளனர். முபாரக் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த மர்ம கும்பல், நேற்று முன் தினம் இரவு வீட்டுக்குள் புகுந்தனர். அவரது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர். அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர்.
வீட்டின் பீரோவில் இருந்த முபாரக்குக்கு தாய் வீட்டில் சீதனமாக கொடுத்திருந்த பெருமளவில் தங்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியோடினர்.
இவர்கள் தாக்கியதில் காயமடைந்த முபாரக் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெறுகிறார்.
இது குறித்து, சித்லகட்டா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். நகை கொள்ளையில், தன் கணவர் சிராஜுக்கும், கடைசி மருமகளின் அண்ணனுக்கும் தொடர்புள்ளது. கணவர், மகன்கள், மருமகள்கள் கூட்டு சேர்ந்து தன் நகைகளை திருடியதாக குற்றம்சாட்டுகிறார்.
போலீசாரும் முபாரக்கின் கணவர், மகனை தொடர்பு கொண்டு விசாரித்த போது, 'தங்கள் வீட்டில் அவ்வளவு நகைகளே இல்லை' என்று கூறியுள்ளனர்.
முபாரக் முன்னுக்கு முரணாக கூறியுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

