/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?
/
சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?
சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?
சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?
ADDED : அக் 10, 2025 04:43 AM
பெங்களூரு: நாட்டிலே சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை மட்டுமே வைத்து இயங்கும் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா மாற உள்ளது.
பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்கா 731 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது. இதில், பட்டாம்பூச்சி பூங்கா, சபாரி மண்டலம், விலங்கு மீட்பு மையம், வன விலங்கு சரணாலயம் ஆகியவை உள்ளன. இந்த பூங்காவின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கக்கூடிய அளவிற்கு சோலார் ஆலை அமைக்கப்பட்டது.
இதை அடுத்த சில நாட்களில் முதல்வர் சித்தராமையா திறந்துவைக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சோலார் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பன்னரகட்டா உயிரியல் பூங்காவின் மின்சார தேவைகள் அனைத்து பூர்த்தி செய்யப்படும்.