sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்ஷன் தோழி பவித்ரா கவுடாவுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா?

 தர்ஷன் தோழி பவித்ரா கவுடாவுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா?

 தர்ஷன் தோழி பவித்ரா கவுடாவுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா?


ADDED : பிப் 12, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் இருக்கும், பவித்ரா கவுடாவின் இடைக்கால ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட, 17 பேர் சிறையில் உள்ளனர். இதில், தர்ஷன் தோழி பவித்ரா கவுடா பல மாதங்களாக சிறையில் உள்ளார்.

இவர், எப்படியாவது இடைக்கா ல ஜாமின் வாங்கி, வெளியில் வரவேண்டும் என முயற்சித்து வருகிறார். இதுவரை, இவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து உள்ளன.

அதுமட்டுமின்றி, சிறையில் சகல வசதிகளும் வேண்டும் என்று நிபந்தனை வைத்திருந்தார். அதாவது, வீ ட்டுச் சாப்பாடு, கூடுதலாக போர்வை என, பல கோரிக்கைகள் வைத்தார். இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால், மகளுடன், 20 நாட்கள் இருக்க வேண்டும் என காரணம் காட்டி இடைக்கால ஜாமின் கேட்டு 57வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது.

வழக்கம் போல ஏதாவது ஒரு காரணத்தை கூறி ஜாமின் கோரும் பவித்ரா, இம்முறை தனது மகளின் படிப்பை காரணம் காண்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us