அமைச்சரவை விரிவாக்கம் பற்றி ஆலோசனை சிவகுமார், சித்தராமையா இன்று டில்லி பயணம்?
அமைச்சரவை விரிவாக்கம் பற்றி ஆலோசனை சிவகுமார், சித்தராமையா இன்று டில்லி பயணம்?
ADDED : ஜூலை 14, 2026 04:00 AM
பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் சிவகுமாரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இன்று டில்லி செல்லும் வாய்ப்புள்ளது. இதனால், அமைச்சர் பதவி எதிர்பார்க்கும் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசில், 13 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் முழுமையாக அமைச்சரவை நிரப்பப்படவில்லை.
ராகுல் ஓய்வு அமைச்சரவையை விரிவாக்கம் செய்தால், தங்களுக்கு வாய்ப்பளிக்க, எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். பல முறை டில்லி சென்று, மேலிடத்தின் சில தலைவர்களை, சந்தித்தனர். இவர்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால், அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானது. வெளிநாட்டில் இருந்து, நேற்று முன்தினம் ராகுல் டில்லி திரும்பினார். நேற்று ஓய்வில் இருந்தார்.
அவரை சந்திக்க முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வரும், காங்., தேசிய செயற்குழு உறுப்பினருமான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் ஆகியோர் இன்று டில்லி செல்லும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே அமைச்சரவையில் யாரை சேர்க்க வேண்டும் என்பது குறித்து, உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, பெரும்பாலும் முடிந்துள்ளது. ராகுல் வெளிநாட்டில் இருந்து திரும்புவதற்காக காத்திருந்தனர். தற்போது அவர் வந்துள்ளதால், அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளனர்.
அனுமதி வாய்ப்பு கிடைத்தால், முதல்வர், முன்னாள் முதல்வர், மாநில தலைவர் டில்லிக்கு செல்வர். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்., தேசிய முதன்மை செயலர் வேணுகோபால் உட்பட முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அனுமதி பெறுவர். மேலிடம் பச்சைக்கொடி காட்டினால், எந்த நேரத்திலும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம்.
ஒரு வேளை ராகுலை சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால், கன்னட ஆஷாடா மாதம் முடியும் வரை, அமைச்சரவை விரிவாக்கம் தள்ளி வைக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
