sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாவணகெரே தொகுதி காங்கிரஸ் போட்டி வேட்பாளர் விலகல்!

 தாவணகெரே தொகுதி காங்கிரஸ் போட்டி வேட்பாளர் விலகல்!

 தாவணகெரே தொகுதி காங்கிரஸ் போட்டி வேட்பாளர் விலகல்!


UPDATED : மார் 28, 2026 07:52 AM

ADDED : மார் 28, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2026 07:52 AM ADDED : மார் 28, 2026 04:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சாமனுார் சிவசங்கரப்பா மறைவால், தாவணகெரே தெற்கு தொகுதிக்கு அடுத்த மாதம், 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்பாளரின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, முஸ்லிம் ஓட்டுக்கள் இருப்பதால், இம்முறை தங்கள் சமூகத்திற்கு சீட் வழங்க வேண்டும் என, வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கான் கோரிக்கை வைத்தார்.

சாமனுார் சிவசங்கரப்பாவின் மகனும், தோட்ட கலைத்துறை அமைச்சருமான மல்லிகார்ஜுன், தன் மகன் சமர்த்துக்கு சீட் கேட்டார். நீண்ட குழப்பத்திற்கு பின், சமர்த்தை வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

இதனால், முஸ்லிம் சமூகம் சார்பில் சீட் எதிர்பார்த்த, சாதிக் பயில்வான் கடும் ஏமாற்றம் அடைந்தார். காங்கிரஸ் தன்னை ஏமாற்றி விட்டது என்று கூறி, சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். அவரை சமாதானப்படுத்தும் பொறுப்பு, ஜமீர் அகமது கானுக்கு கொடுக்கப்பட்டது.

ரிஸ்வான் அர்ஷத் ஆனால், சாதிக்கை சமாதானப்படுத்த அவர் துளி கூட முயற்சி எடுக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிட சாதிக் பயில்வான் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். எக்காரணத்திற்காகவும் போட்டியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் கூறி வந்தார்.

நேற்று முன்தினத்துடன் வேட்புமனுவை திரும்ப பெறும் கடைசி நாளும் முடிந்தது. சாதிக் களத்தில் இருப்பது உறுதியானது.

இனி ஜமீரை நம்பி பலன் இல்லை என்று நினைத்த முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவரும், எம்.எல்.சி.,யுமான சலீம் அகமது, சிவாஜிநகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத்திடம், சாதிக்கை சமாதானப்படுத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். நேற்று முன்தினம் தாவணகெரே சென்ற இருவரும், சாதிக் வீட்டிற்கு சென்று அவரிடம் பேச்சு நடத்தினர்.

முதலில் விடாப்பிடியாக இருந்த சாதிக்கிடம் பேசி, அவரது மனதை இருவரும் கரைத்தனர். 'நீங்கள் போட்டியிட்டால் ஓட்டுகள் பிரியும். பா.ஜ., வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அவர்கள் வெற்றி பெற்றால் தொகுதி நம் கட்டுப்பாட்டில் இருந்து போய் விடும்' என்று எடுத்துக் கூறினர். யோசித்து சொல்வதாக இருவரையும், சாதிக் வழியனுப்பி வைத்தார்.

வாரிய தலைவர் இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு காவிரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவை சாதிக் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சலீம் அகமது, ரிஸ்வான் அர்ஷத், முஸ்லிம் சமூக தலைவர்கள் உடன் இருந்தனர். முதல்வரிடம் சாதிக் பேசுகையில், ''தாவணகெரே தெற்கில் நியாயப்படி முஸ்லிம் சமூகத்திற்கு தான், சீட் கிடைத்திருக்க வேண்டும். எங்கள் சமூகத்திற்கு அநீதி ஏற்பட்டு உள்ளது,'' என்று கூறி தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

பாகல்கோட்டில் மேட்டி குடும்பத்திற்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று தான் தாவணகெரே தெற்கிலும் கொடுத்து உள்ளோம். கடந்த, 30 ஆண்டுகளாக கட்சிக்காக, நீங்கள் உழைத்த உழைப்பு பற்றி எனக்கு தெரியும். ஷிகாவியில் அஜ்ஜாம் பீர் காத்ரி சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

என் உத்தரவின்படி வேட்புமனுவை திரும்ப பெற்று, கட்சி அறிவித்த வேட்பாளருக்கு உழைத்தார். அவருக்கு வாரிய தலைவர் பதவி கொடுத்து உள்ளேன்.

உங்கள் உழைப்புக்கு ஏற்ப பதவி நிச்சயம் வரும். முஸ்லிம் சமூகத்துடன் அரசு எப்போதும் துணை நிற்கும் என்று சாதிக்கிடம், சித்தராமையா பேசினார். இதனை ஏற்று கொண்ட சாதிக் போட்டியில் இருந்து விலகுவதாக கூறினார்.

எனது பொறுப்பு பின், அங்கிருந்து புறப்பட்ட சாதிக், சதாசிவநகரில் உள்ள துணை முதல்வர் சிவகுமார் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்.

தன் வீட்டில் இருந்து, குயின்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சாதிக்கை, தன் காரில் சிவகுமார் அழைத்து சென்றார். சாதிக்கிற்கு கட்சி துண்டை தோளில் அணிந்து வரவேற்றார். சாதிக் எங்களுடன் தான் உள்ளார். போட்டியில் இருந்து விலகி விட்டார் என்று கூறினார்.

சாதிக் கூறுகையில், ''தாவணகெரே தெற்கில் எந்த சூழ்நிலையிலும், பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது. அதில், நான் உறுதியாக உள்ளேன். என்னால் கட்சிக்கு பிரச்னை வர கூடாது என்பதால், போட்டியில் இருந்து விலகுகிறேன். சாமனுார் சிவசங்கரப்பாவை என் தந்தை போன்றே பார்த்தேன். அவரது பேரன் சமர்த்தை என் மகன் போன்று பார்க்கிறேன். அவரை வெற்றி பெற வைப்பது என் பொறுப்பு,'' என்றார்.

'இரட்டை நாக்கு உடையவர்கள்'

எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் கூறியதாவது:

தாவணகெரே தெற்கில் முஸ்லிம் சமூகத்திற்கு சீட் கொடுக்காமல், காங்கிரஸ் ஏமாற்றியதாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை சீட் கொடுத்து இருந்தால், திருப்திபடுத்தும் அரசியல் நடப்பதாக கூறுவர். அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள்.

பா.ஜ.,வின் அனுதாபம் எங்களுக்கு தேவை இல்லை. மதவாத அரசியல் செய்யும், பா.ஜ.,வுக்கு, முஸ்லிம்கள் ஒரு போதும் ஓட்டு போட மாட்டார்கள். தாவணகெரே தெற்கில் எங்கள் வெற்றி 100 சதவீதம் உறுதி. அமைச்சர் ஜமீர் அகமது கான் அதிருப்தியில் இல்லை. கேரளாவில் தேர்தல் நடக்க உள்ளதால், அங்கு பிரசாரத்திற்கு சென்று உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us