/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராட்வீலர் நாய்கள் கடித்து பெண் பலி
/
ராட்வீலர் நாய்கள் கடித்து பெண் பலி
ADDED : டிச 06, 2025 05:33 AM
தாவணகெரே: ராட்வீலர் இன நாய்கள் கடித்ததில், ஒரு பெண் பலியானார்.
தாவணகெரே புறநகரின் ஹொன்னுார கொல்லரஹட்டி கிராமத்தில் வசித்தவர் அனிதா, 38. நேற்று அதிகாலையில் அறிமுகமில்லாத நபர்கள், காரில் கொண்டு வந்த ராட்வீலர் இனத்தை சேர்ந்த இரண்டு நாய்களை, கிராமத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர்.
நாய்கள் அங்கும் இங்கும் நடமாடிய நேரத்தில், அனிதா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது நாய்கள் அவர் மீது பாய்ந்து கடித்து குதறின. உடலில், 50க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் விழுந்திருந்த அவரை, குடும்பத்தினர் கிராம மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கூடுதல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.
இவரை கடித்த நாய்கள், கிராமத்தின் வயலில் இருந்தன. இதனால், கோபம் அடைந்த கிராமத்தினர், நாய்களை பிடித்து காலில் கயிறு கட்டி வைத்தனர். அவைகளை கிராமத்தில் கொண்டு வந்து விட்டு சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

