/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை பிரம்மானந்த குருஜி மீது புகார்
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை பிரம்மானந்த குருஜி மீது புகார்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை பிரம்மானந்த குருஜி மீது புகார்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை பிரம்மானந்த குருஜி மீது புகார்
ADDED : டிச 14, 2025 07:58 AM

தொட்டபல்லாபூர்: வீட்டுமனை வாங்கி தருவதாக கொடுப்பதாக நம்ப வைத்து, பெண்ணிடம் லட்சக்கணக்கான ரூபாயை பெற்று மோசடி செய்ததுடன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மடாதிபதி மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின் மேளகோட்டேவில் மகரிஷி வால்மீகி குருகுலம் மடம் உள்ளது. இதன் மடாதிபதி பிரம்மானந்த குருஜி. இவரது வீட்டின் அருகில் 25 வயது இளம்பெண் தன் கணவருடன் வசிக்கிறார். இந்த பெண்ணை அறிமுகம் செய்து கொண்ட மடாதிபதி, 'தனக்கு செல்வாக்கு மிக்கவர்களை தெரியும். அவர்கள் மூலமாக குறைந்த விலைக்கு வீட்டுமனை கிடைக்க செயகிறேன்' என ஆசை வார்த்தை கூறினார்.
8 லட்சம் ரூபாய் அப்போது அப்பெண், 'தன்னிடம் எட்டு லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது' என்றார். மடாதிபதி, 'அந்த பணத்தை தாருங்கள். மீதி தொகையை நான் கொடுக்கிறேன்' என கூறினார். அப்பெண், முதற்கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பணம் கொடுத்து ஓராண்டாகியும், வீட்டுமனை தரவில்லை. எனவே பணத்தை திருப்பி தரும்படி, அப்பெண் கேட்டார். ஆனால் மடாதிபதி, 'என் அறைக்கு வா, பணம் கொடுக்கிறேன். உனக்கு பணம் வேண்டும். எனக்கு உல்லாசம் வேண்டும்' என, ஆபாசமாக பேசியுள்ளார். மடாதிபதி பேசியதை அப்பெண், தன் மொபைல் போனில் ஆடியோ, வீடியோ பதிவு செய்து கொண்டார்.
இது போன்று மடாதிபதி தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளார். பெண் தனியாக இருக்கும் போது, வீட்டுக்கு வந்து தன்னை பற்றிய ஆடியோ, வீடியோவை அழிக்கும்படி நெருக்கடி கொடுத்தார். அவற்றை அழித்தால், 50,000 ரூபாய் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினார். நடந்த சம்பவங்களை அறிந்த பெண்ணின் கணவர், கோபமடைந்து மனைவியை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
போலீசில் புகார் மனம் நொந்த அப்பெண், ஆடியோ, வீடியோ ஆவணங்களுடன், தொட்டபல்லாபூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து கொண்டு, விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள மடாதிபதி, 'வீட்டுமனைக்காக அப்பெண்ணும், அவரது கணவரும் 5 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தனர். மனை கிடைக்காததால் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனால் மேலும் பணம் கேட்கின்றனர். பணம் கொடுக்காவிட்டால், என்னை ஹனிடிராப் வலையில் சிக்க வைக்க, முயற்சிக்கின்றனர் . அவர்கள் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்' என கூறியுள்ளார்.
பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, மடாதிபதியும் போலீசில் புகார் செய்துள்ளார்.

