ADDED : ஆக 22, 2026 01:31 AM
அ நிறம் | அளவு
மைசூரு: கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் நடந்தது.
மைசூரின் எச்.டி.கோட் ஹெப்பாலகுப்பே கிராமத்தின் மகேஷ் என்பவர், மனைவி ஆஷா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரசவ வலியால் துடித்தார்.
மருத்துவ ஊழியர் மகேஷ், டிரைவர் பிரசன்னா ஆகியோர் ஆம்புலன்சில் வைத்தே பிரசவம் பார்த்தார். ஆஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளனர்.
