தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெலகாவியில் பெண் மானபங்கம்; 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

 பெலகாவியில் பெண் மானபங்கம்; 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

 பெலகாவியில் பெண் மானபங்கம்; 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு


ADDED : பிப் 04, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெலகாவியில் பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், 12 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என்று 10வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

பெலகாவி மாவட்டம், ஹொச வந்தமுரி கிராமத்தை சேர்ந்த 42 வயது பெண்ணின் 24 வயது மகனும், அதே கிராமத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணும் காதலித்தனர். இருவரின் வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம்பெண்ணுடன் அந்த இளைஞர் ஊரைவிட்டு ஓடினார்.

இதனால் கோபம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், 2023 டிச., 11ம் தேதி அதிகாலை இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த அவரின் தாயாரை சரமாரியாக தாக்கினர். அத்துடன், வீட்டையும் சேதப்படுத்தினர்.

அத்துடன், அவரை வீதியில் இழுத்து வந்து தாக்கியதுடன், மின்கம்பத்தில் கட்டி வைத்து, ஆடைகளை அவிழ்த்து தாக்கினர். இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக உயர் நீதிமன்றமும், தாமாக முன்வந்து, வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, பெண்ணை தாக்கியதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு மாதம் சிறையில் இருந்த அனைவரும், ஜாமினில் வெளியே வந்தபோது, அவரின் உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இவ்வழக்கு விசாரணையை, ஓராண்டுக்குள் முடிக்க, 10வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கில், நீதிபதி மஞ்சுநாத் முன் இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்தது. கைது செய்யப்பட்ட பசப்பா நாயக், ராஜு நாயக், கெம்பண்ணா நாயக், பார்வதி நாயக், லக்கப்பா நாயக், எல்லவ்வ நாயக், கங்கவ்வா நாயக், சங்கீதா ஹெக்க நாயக், சந்தோஷ் நாயக், ஷோபா நாயக், லக்கவ்வா நாயக், சிவ்பா வன்னுாரி ஆகிய 12 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி மஞ்சுநாத் நேற்று அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை விபரத்தை இன்று அறிவிப்பதாக தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us