தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கால்வாயில் கிடந்த பெண் உடல்: நகைக்காக கொலையா என விசாரணை

கால்வாயில் கிடந்த பெண் உடல்: நகைக்காக கொலையா என விசாரணை

கால்வாயில் கிடந்த பெண் உடல்: நகைக்காக கொலையா என விசாரணை


UPDATED : அக் 08, 2026 12:00 AM

ADDED : அக் 07, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:00 AM ADDED : அக் 07, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: கால்வாயில் கிடந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகா, ஹிரேஹள்ளிகொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா, 67. இவரது கணவ ர் அன்னே கவுடா. லட்சுமம்மா, விஜயகொப்பலு கிராமத்தில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க செல்வதாக கூறி விட்டு, கடந்த 3ம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டார்.

ஆனால், இவர் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில், அன்னே கவுடா தேடினார். இருப்பினும், அவர் கிடைக்காததால், தனது மனைவி காணாமல் போனதாக, கோனனுார் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இந்நிலையில், ஹாசனில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கோனனுார் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. கால்வாயில் பிளாஸ்டிக் பையில் பெண்ணின் உடல் சுற்றப்பட்டு இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்த கிடந்தவர், காணாமல் போன லட்சுமம்மா என்பதை போலீசார் உறுதி செய்தனர். லட்சுமம்மாவின் உடலின் பல பகுதிகளில் காயம் இருந்ததையும், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போனதையும் போலீசார் உறுதி செய்தனர்.

தங்க நகைகளுக்காக லட்சுமம்மா கொலை செய்யப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us