/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதியவரை பராமரித்த பெண் தங்க செயின் திருட்டில் கைது
/
முதியவரை பராமரித்த பெண் தங்க செயின் திருட்டில் கைது
முதியவரை பராமரித்த பெண் தங்க செயின் திருட்டில் கைது
முதியவரை பராமரித்த பெண் தங்க செயின் திருட்டில் கைது
ADDED : செப் 30, 2025 05:29 AM
ஆர்.டி.நகர்: பணியாற்றிய வீட்டில் முதியவரின் தங்க நகையை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
சிக்கபல்லாபூரை சேர்ந்தவர் காளம்மா, 30. இவர் பெங்களூரு ஆர்.டி.நகரின், இரண்டாவது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முதியவரை பராமரிக்கும் பணி செய்து வந்தார். முதியவரை குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது என, அனைத்தையும் செய்தார்.
கடந்த 17ம் தேதியன்று காலையில் முதியவரிடம், 'என் தங்கை இறந்துவிட்டார். ஊருக்கு செல்ல வேண்டும்' என, காளம்மா கூறினார். ஊருக்கு செல்வதற்கு முன்பு, முதியவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டினார். அப்போது அவர் கழுத்தில் இருந்த 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச்செயினை கழற்றிக் கொண்டார். இதை முதியவர் கவனிக்கவில்லை.
நகையை திருடிக்கொண்டு காளம்மா தப்பிவிட்டார். சிறிது நேரத்துக்கு பின், நகையை காணாததை தெரிந்து கொண்ட முதியவர், காளம்மாவை தன் வீட்டில் பணிக்கு அனுப்பிய ஹெல்த் கேர் சென்டருக்கு போன் செய்து, தகவல் கூறினார். அந்நிறுவனத்தினர் ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி சிக்கபல்லாபூரில் காளம்மாவை கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்; தங்கச்செயினையும் மீட்டனர்.