/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தவறுதலாக வெடித்த துப்பாக்கி பெண்ணின் சிறுநீரகம் அகற்றம்
/
தவறுதலாக வெடித்த துப்பாக்கி பெண்ணின் சிறுநீரகம் அகற்றம்
தவறுதலாக வெடித்த துப்பாக்கி பெண்ணின் சிறுநீரகம் அகற்றம்
தவறுதலாக வெடித்த துப்பாக்கி பெண்ணின் சிறுநீரகம் அகற்றம்
ADDED : ஜூலை 31, 2025 06:02 AM
ஹென்னுார் : தவறுதலாக பாய்ந்த துப்பாக்கி குண்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிறுநீரகத்தை டாக்டர்கள் அகற்றினர்.
பெங்களூரு காக்ஸ் டவுனை சேர்ந்தவர் ரேச்சல், 30. கடந்த 28ம் தேதி இரவு ஹொரமாவு ஆசிர்வாத் காலனியில் வசிக்கும் நண்பரான, தொழிலதிபர் நிகில் நாயக் வீட்டிற்கு சென்று இருந்தார். இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து நிகில் நாயக் கழிப்பறைக்குச் சென்றார்.
இந்த நேரத்தில் ஹாலின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த, கைத்துப்பாக்கியை எடுத்து ரேச்சல் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிரிக்கர் அழுத்தப்பட்டு, துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு ரேச்சலின் வயிற்றில் பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு கழிப்பறையில் இருந்து நிகில் நாயக் வெளியே வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ரேச்சல் விழுந்து கிடந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரேச்சலின் வயிற்றில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. ஆனால், அந்த குண்டால் ரேச்சலின் வலதுபக்க சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது குடும்பத்தினர் அனுமதியுடன், சிறுநீரகத்தை டாக்டர்கள் அகற்றினர்.
ரேச்சலின் சகோதரி அளித்த புகாரில், ஹென்னுார் போலீசார் நிகில் நாயக் மீது வழக்குப்பதிவு செய்தனர். நிகிலிடம் துப்பாக்கி பயன்படுத்த உரிமம் இருந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.