/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்வே நடத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு மகளிர் ஆணைய தலைவி வலியுறுத்தல்
/
சர்வே நடத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு மகளிர் ஆணைய தலைவி வலியுறுத்தல்
சர்வே நடத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு மகளிர் ஆணைய தலைவி வலியுறுத்தல்
சர்வே நடத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு மகளிர் ஆணைய தலைவி வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2025 04:56 AM

பெங்களூரு: 'பெங்களூரில் ஜாதி வாரி சர்வே நடத்தும் பெண்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனருக்கு, மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று எழுதிய கடிதம்:
பெங்களூரில் ஜாதிவாரி சர்வே நடத்த செல்லும் பெண்களை, பொதுமக்கள் அவமதிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சர்வே எடுக்கச் செல்லும் பணியாளர்களுக்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் வீடுகளை நிர்ணயிக்கவில்லை. இதனால், குழப்பம் ஏற்படுகிறது.
உடனடியாக வார்டு மற்றும் வீடுகளை சரியாக ஒதுக்க வேண்டும். சில சர்வே எடுக்கச் செல்லும் பணியாளர்களின் மொபைல் செயலி சரியாக செயல்படவில்லை. ஆதார் ஓ.டி.பி., சரியாக வருவது இல்லை. தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சர்வே பணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியலில், பெயர் இருந்தாலும் சிலரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. இதனால், சர்வே தாமதமாகிறது. வாக்காளர் அட்டை இல்லாதோருக்கு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
சில சர்வே எடுக்கச் செல்லும் பணியாளர்களுக்கு இதுவரை அடையாள அட்டை, ஆய்வுக்கு தேவையான படிவங்கள், கிட்கள் வழங்கப்படவில்லை. பெண் சர்வே பணியாளர்கள், தொலைவில் உள்ள வார்டுகளுக்கு ஆய்வு செய்ய அனுப்பப்படுகின்றனர்.
இவர்களை வீட்டின் அருகில் உள்ள வார்டுகளுக்கு நியமிக்க வேண்டும். விரைவில் தீபாவளி வருகிறது. மனித நேயம் அடிப்படையில் இவர்கள் பண்டிகை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும். குறிப்பிட்ட அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, மகளிர் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சர்வே நடத்தும்படி, பெண் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களின் வீட்டில் சிறு குழந்தைகள், உடல் நிலை பாதிக்கப்பட்ட மாமியார், மாமனார், தாய், தந்தை இருப்பர்.
சர்வே நடத்த செல்வதால், இவர்களை பார்த்து கொள்வது கஷ்டமாக உள்ளது. எனவே இவர்களுக்கு மாலை 6:00 மணி வரை, சர்வே நடத்த அனுமதியளிக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.