தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காய்ந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்

 காய்ந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்

 காய்ந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்


UPDATED : மார் 12, 2026 06:05 AM

ADDED : மார் 12, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2026 06:05 AM ADDED : மார் 12, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரின் மேற்கு, தெற்கு, சென்ட்ரல் ஆகிய மூன்று மாநகராட்சிகளில், மிகவும் மோசமான நிலையில் உள்ள காய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.

பெங்களூரில் சாலையோரங்களில் காய்ந்த நிலையில் பல மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்களின் கிளைகள் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் உள்ளன. இது, வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 'எப்போது வேண்டுமானாலும் மரக்கிளைகள் விழலாம். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பெங்களூரு மேற்கு, தெற்கு, சென்ட்ரல் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் காய்ந்த மரங்களையும், அவற்றின் கிளைகளையும் அகற்றும் பணி துவங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் வரும் 25ம் தேதி வரை நடக்கும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஹலசூரு பகுதியின் கங்காதர ஷெட்டி சாலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்த காய்ந்த மரத்தை அகற்றும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், அச்சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us