/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்
/
ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்
ADDED : ஜன 13, 2026 04:54 AM

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். இக்கோவில் உள்ள பகுதி, ஒரு காலத்தில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கு துறவிகளும், ரிஷிகளும் தவம் செய்தனர். இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில் என்பது துர்கா தேவியின் ஷைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மந்தா, ஸ்கந்தமாதா ஆகிய பஞ்ச வடிவங்களை குறிக்கிறது. கருவறையில் துர்கையின் வடிவத்தை பார்த்தால் மெய்சிலிர்க்கிறது. புராண கதைகளை சித்தரிக்கும் வகையில், சிற்பங்கள் ராஜகோபுரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
துர்கா தேவி கருவறையை சுற்றி விசாலமான பிரகாரம் அமைந்து உள்ளது. கோவிலில் பெரிய முற்றம், துாண்கள் கொண்ட மண்டபங்கள், தெப்பகுளம் அமைந்து உள்ளது.
கோவிலுக்குள் துர்கா பரமேஸ்வரி தேவி மூலவர், கல்லால் செய்யப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் ஹனுமன் உட்பட மற்ற தெய்வங்களின் சன்னிதிகளும் உள்ளன. அம்மனை தரிசிக்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
- நமது நிருபர் -

