/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யஷ்வந்த்பூர் - மங்களூரு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
/
யஷ்வந்த்பூர் - மங்களூரு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
யஷ்வந்த்பூர் - மங்களூரு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
யஷ்வந்த்பூர் - மங்களூரு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஆக 25, 2025 04:18 AM
பெங்களூரு:விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, யஷ்வந்த்பூர் - மங்களூரு இடையில் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஹூப்பள்ளி - யஷ்வந்த்பூர் இடையில் இன்று சிறப்பு ரயில் எண் 06251 இயக்கப்படுகிறது. ஹூப்பள்ளியில் இருந்து இன்று மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில், நாளை காலை 10:40 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
இதுபோல யஷ்வந்த்பூர் - மங்களூரு சென்ட்ரல் இடையில் இன்று சிறப்பு ரயில் எண் 06251 இயங்குகிறது. யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் நாளை காலை 11:45 மணிக்கு மங்களூரு செல்கிறது.
'சாத்' எனும் சூரியனை வணங்கும் பண்டிகைக்காக எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - அசாம் மாநிலம் நாரங்கி இடையில் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை, வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் ரயில் எண் 06559 பெங்களூரிலிருந்து புறப்படுகிறது. அன்று இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில், வெள்ளிக்கிழமை காலை 5:00 மணிக்கு நாரங்கியை சென்றடைகிறது.
எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பீதர் இடையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் ரயில் எண் 06539 வரும் 31ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த ரயில் சேவை அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பீதர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் எண் 06540 அடுத்த மாதம் 6 ம் தேதி முதல் 29ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.