UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: ஒரு லிட்டர் நந்தினி தயிர் விலையை, இரண்டு ரூபாய் குறைத்து, கர்நாடக பால் கூட்டுறவு சங்கம் அறிவித்து உள்ளது. இந்த விலை குறைவு, நவ., 29ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததால், ஒரு லிட்டர் தயிர் விலையை குறைக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, கர்நாடக பால் கூட்டமைப்பு, நேற்று ஒரு லிட்டர் தயிரின் விலையை, 68 ரூபாயில் இருந்து 66 ரூபாய்; தயிரின் விலையை 34 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும் குறைத்து உள்ளது.
இந்த விலை குறைப்பு, நவ., 29ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளது.
