தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கீரையை சமைக்கும் போது கொஞ்சமாக சர்க்கரை சேர்க்கலாம்

கீரையை சமைக்கும் போது கொஞ்சமாக சர்க்கரை சேர்க்கலாம்

கீரையை சமைக்கும் போது கொஞ்சமாக சர்க்கரை சேர்க்கலாம்


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ரவா தோசை மாவில் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு கலந்து சுட்டால், தோசை பொன்னிறமாக மொறுமொறுப்பாக வரும்

 கேரட் சூப் தயாரிக்கும் போது, சிறிதளவு வறுத்த சேமியா சேர்த்தால், சூப் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்

 பக்கோடாவுக்கு மாவு தயாரிக்கும் போது சிறிதளவு நெய் மற்றும் உப்பு சேர்த்த தயிர் கலந்து பிசைந்தால், பக்கோடா நன்றாக மொறுமொறுப்பாக வரும்

 எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் கடுகு எண்ணெய் சேர்த்தால் நீண்ட நாட்கள் ஆனாலும் கெட்டு போகாது

 சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கொஞ்சமாக பாலும், சர்க்கரையும் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்

 கீரை மற்றும் காய்கறிகளை சமைக்கும் போது, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்

 மோர் குழம்புக்கு தாளிக்கும்போது, மூன்று கிராம்புகளை சேர்த்தால், கூடுதல் மணம், சுவை கிடைக்கும்

 சாம்பார் தயாரிக்கும்போது, சிறிது சௌசௌ காயை வதக்கி சேர்த்தால், சாம்பாருக்கு நல்ல மணமும் கூடுதல் சுவையும் கிடைக்கும்

 முட்டையை வேகவைக்கும் போது தண்ணீரில் வினிகர் சேர்த்தால், முட்டை உடையாமல் பதமாக வெந்திருக்கும்

 நறுக்கிய கத்திரிக்காய், வாழைக்காய்களை சிறிது உப்பு கலந்த மோர் தண்ணீரில் போட்டு வைத்தால், அவை மாறாமல் இருக்கும்

 பால் அல்வா தயாரிக்கும் போது, சிறிதளவு கோகோ பவுடர் சேர்த்து கிளறினால், சாக்லெட் சுவையுடன் கூடிய பால் அல்வா தயார்

 அடை மாவில் சிறிதளவு கான் பிளேக்ஸ் சேர்த்து தயாரித்தால், அடை மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us