/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிக்னல்கள் நிறம் மாறும் நேரம் மொபைல் போனில் அறியலாம்
/
சிக்னல்கள் நிறம் மாறும் நேரம் மொபைல் போனில் அறியலாம்
சிக்னல்கள் நிறம் மாறும் நேரம் மொபைல் போனில் அறியலாம்
சிக்னல்கள் நிறம் மாறும் நேரம் மொபைல் போனில் அறியலாம்
ADDED : அக் 14, 2025 04:58 AM
பெங்களூரு: 'மேப்பிள்ஸ்' செயலி, சிக்னல்கள் நிறம் மாறும் நேரத்தை மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளின் துன்பத்தை குறைக்க மாநில அரசும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இவ்வகையில், போக்குவரத்து போலீசார், தனியார் நிறுவனமான 'மேப் மை இண்டியாவுடன்' இணைந்து புதிய முயற்சியில் இறங்கினர். நகரில் உள்ள சிக்னல்கள் எவ்வளவு நேரத்தில் பச்சை, சிவப்பாக மாறும் என்பதை வாகன ஓட்டிகள், தங்கள் மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த நிறுவனத்தின் 'மேப்பிள்ஸ்' செயலி, சிக்னல்கள் நிறம் மாறும் நேரத்தை, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிக்னலில் நின்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள், அடுத்த சிக்னலில் எப்போது பச்சை சிக்னல் எரியும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதற்கேற்ப வேகத்தில், அவர்கள் தங்களது வாகனங்களை இயக்கினால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்ப முடியும்.
இதுகுறித்து மேப் மை இண்டியா நிறுவன இயக்குநர் ரோஹன் வெர்மா கூறுகையில், ''சிக்னல்கள் நிறம் மாறும் நேரம் குறித்து அறிவது நாட்டிலே முதல் முறையாக பெங்களூரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த பெங்களூரு போக்குவரத்து போலீசாருக்கு நன்றி,'' என்றார்.