/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தோல் நோயால் விரக்தி இளம்பெண் தற்கொலை
/
தோல் நோயால் விரக்தி இளம்பெண் தற்கொலை
ADDED : ஆக 27, 2025 11:01 PM
பெலகாவி, : பெலகாவி மாவட்டம், சென்னம்மன கித்துார் தாலுகாவின், தேவரஷீகஹள்ளி கிராமத்தில் வசித்தவர் வித்யாஸ்ரீ, 25. இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளன. சமீப நாட்களாக, தோல் நோயால் அவதிப்பட்டு வந்தார். உடலில் ஆங்காங்கே புண்கள் ஏற்பட்டன.
இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின், புண்கள் சிறிது, சிறிதாக குணமடைந்தன. ஆனால் புண்களின் வடு மாறவில்லை.
இதனால், அவர் மன அழுத்தத்துக்கு ஆளானார். வடு மறையாது என, அஞ்சினார். இதே காரணத்தால், நேற்று அதிகாலை, கிராமத்தில் ஓடும் மல்லப்பிரபா ஆற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.
வித்யாஸ்ரீயை காணாமல், குடும்பத்தினர் தேடிய போது, தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த கித்துார் போலீசார், உடலை மீட்டனர்.