/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
/
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
ADDED : அக் 11, 2025 05:02 AM

மைசூரு:கலபுரகியை சேர்ந்த சில குடும்பங்கள், தசரா பண்டிகைக்காக வியாபாரம் செய்ய மைசூருக்கு வந்தன. அவர்களில் 1-0 வயது சிறுமியும் இருந்தாள். பலுான், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களை சாமுண்டி மலை, பன்னி மண்டபம், தேவராஜ் மார்க்கெட் என, பல இடங்களில் சிறுமியின் பெற்றோர் விற்றனர்.
பொருட்காட்சி மைதானம் அருகில், தற்காலிக கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். 8ம் தேதி, நள்ளிரவு வரை வியாபாரம் நடந்தது.
அதன்பின் கூடாரத்துக்கு வந்து உறங்கினர். தன் தாயின் பக்கத்தில் சிறுமி படுத்திருந்தாள்.
மழை பெய்ததால் சிறுமியின் பெற்றோர் அதிகாலை 4:00 மணியளவில் விழித்துக் கொண்டனர். அப்போது சிறுமி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுப்பகுதியில் எங்கும் இல்லாததால் நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கூடாரத்தில் இருந்து, 50 அடி தொலைவில் சிறுமியின் உடல் கிடந்தது. உடலில் உடைகள் இருக்கவில்லை. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
சுற்றுப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மைசூரின், சித்தலிங்கபுராவில் வசிக்கும் கார்த்திக், 31, என்பவரை போலீசார் அடையாளம் கண்டனர். இவர், மாண்டியாவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது தெரிய வந்தது.
நான்கு மாதங்களுக்கு முன்பு, சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார். சிறுமியின் உடல் கிடந்த இடத்தில், கார்த்திக் நடமாடியதால், அவரை பிடிக்க போலீசார் முயற்சித்தனர். சாம்ராஜ்நகரின் கொள்ளேகாலுக்கு பஸ்சில் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
போலீசார் தாமதிக்காமல், கொள்ளேகாலுக்கு சென்று நள்ளிரவில் அவரை கண்டுபிடித்தனர். மைசூருக்கு அழைத்து வரும் வழியில் மேடகள்ளி அருகில், ஏட்டு வெங்கடேஷை தாக்கிவிட்டுத் தப்பியோட முயற்சித்தார்.
எச்சரிக்கையை மீறி போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சி செய்ததால், எஸ்.ஐ., ஜெய் கீர்த்தி சுட்டதில், கார்த்திக்கின் வலது காலில் குண்டு பாய்ந்து, கீழே விழுந்தார். அவரை பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லாட்கர், மருத்துவமனைக்கு சென்று, கார்த்திக்கிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது, அவர் தான் என்பது உறுதியானது.