/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அக்கா, தங்கையை பலாத்காரம் செய்ததுடன் ரூ.37 லட்சம் பறித்த வாலிபர் கைது
/
அக்கா, தங்கையை பலாத்காரம் செய்ததுடன் ரூ.37 லட்சம் பறித்த வாலிபர் கைது
அக்கா, தங்கையை பலாத்காரம் செய்ததுடன் ரூ.37 லட்சம் பறித்த வாலிபர் கைது
அக்கா, தங்கையை பலாத்காரம் செய்ததுடன் ரூ.37 லட்சம் பறித்த வாலிபர் கைது
ADDED : டிச 29, 2025 06:30 AM

பாகல்குண்டே: காதலிப்பதாக ஏமாற்றி அக்கா மற்றும் தங்கையை பலாத்காரம் செய்ததுடன், அவர்களிடம், 37 லட்சம் ரூபாய் வாங்கி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஹரியானாவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா, 29. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இவர், டி.தாசரஹள்ளியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 2023ல் சுபான்ஷுவுக்கும், பாகல்குண்டேயில் வசிக்கும், 15 வயது சிறுமிக்கும், நண்பர் ஒருவர் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர்.
சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற சுபான்ஷு, ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின், சிறுமியை மிரட்ட ஆரம்பித்து உள்ளார். எனக்கு உன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தால், உன்னை மிரட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
வேறு வழியின்றி சிறுமி, தன் குடும்ப உறுப்பினர்களை, சுபான்ஷுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, சிறுமியின் அக்காவான, 23 வயது இளம் பெண்ணிற்கும், சுபான்ஷுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
ஏழு மாதங்களுக்கு முன், அந்த இளம்பெண்ணை மும்பைக்கு அழைத்து சென்றார் சுபான்ஷு. அங்கு திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல இருவரும் ஒரே வீட்டில் சில நாட்கள் வசித்தனர்; நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.
இதற்கிடையில், சுபான்ஷுவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது பற்றி இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது. இதுபற்றி கேட்ட போது தனக்கு விவாகரத்து ஆனதாகவும், உன்னை திருமணம் செய்வேன் என்றும், இளம்பெண்ணிடம், சுபான்ஷு கூறி உள்ளார். அதனால், இளம்பெண்ணும் அவருடன் தொடர்ந்து வசித்தார்.
மேலும் பல காரணங்களை கூறி இளம்பெண்ணிடம் இருந்து சுபான்ஷு 37 லட்சம் ரூபாய் வாங்கியதுடன், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து, 559 கிராம் நகைகளையும் வாங்கியுள்ளார். பின், மற்றொரு இளம்பெண்ணை சுபான்ஷு காதலித்துள்ளார்.
இதுபற்றி அறிந்த இளம்பெண், சுபான்ஷுவிடம் சண்டை போட்ட போது, நடந்த விபரங்களை வெளியே கூறினால் உன்னையும், குடும்பத்தினரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். ஆனாலும், பயப்படாத காதலி சுபான்ஷு மீது கடந்த 25ம் தேதி பாகல்குண்டே போலீசில் புகார் செய்தார். சுபான்ஷு நேற்று கைது செய்யப்பட்டார்.

