/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ் வாலிபர் கைது
/
நடிகை ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ் வாலிபர் கைது
ADDED : ஆக 09, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: நடிகை ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதில், முக்கிய பங்கு வகித்தவர் கைது செய்யப்பட்டார்.
'சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் தொடர்புள்ளவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்' என, நடிகை ரம்யா கூறியதால், நடிகர் தர்ஷன் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்தனர்.
இதுகுறித்து, அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சி.சி.பி., போலீசார் விசாரணை நடத்தினர். ஐ.பி., முகவரியை வைத்து, 15 பேரை கண்டுபிடித்தனர். ஐந்து பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரமோத் கவுடா, 18, என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் பெங்களூரின் கே.ஆர்.புரத்தில் வசிக்கிறார்.