ADDED : டிச 30, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாதேவபுரா: ஷாப்பிங் மாலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அசாம் மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மஹாதேவபுரா பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில், கடந்த 25ம் தேதி இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. இதில், 25 வயது இளம்பெண், தனது தோழிகளுடன் கலந்து கொண்டு நடனமாடினார்.
கூட்டத்தை பயன்படுத்தி கொண்டு இளம்பெண்ணிற்கு, ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பினார். இளம்பெண் அளித்த புகாரில், மஹாதேவபுரா போலீசார் விசாரித்தனர். ஷாப்பிங் மாலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த மனோஜ் சந்த், 27 நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர், உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தது தெரிந்தது.

