தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: நடு ரோட்டில் தீக்குளித்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாண்டியாவின் மலவள்ளி அலகுடு கிராமத்தில் வசித்தவர் சந்தன், 27. இவர், தனது கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த சந்தன், இளம்பெண்ணை கொன்று தானும் தற்கொலை செய்ய நினைத்தார்.

கடந்த மாதம், 29ம் தேதி, மைசூருக்கு வந்த சந்தன், இளம்பெண் படிக்கும் கல்லுாரி அருகே நின்றார். இளம்பெண் வந்ததும் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சந்தன், இளம்பெண்ணையும் கட்டி பிடித்தார். அப்பகுதி மக்கள் மீட்டனர்.

சந்தனுக்கு உடலில் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால், மைசூரு அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us