/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் காதலியால் இளைஞர் தற்கொலை
/
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் காதலியால் இளைஞர் தற்கொலை
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் காதலியால் இளைஞர் தற்கொலை
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் காதலியால் இளைஞர் தற்கொலை
ADDED : அக் 18, 2025 11:10 PM
உடுப்பி: தனியார் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. இவரது தற்கொலைக்கு இளம்பெண் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
உடுப்பி மாவட்டம், கார்கலா தாலுகாவின் நிட்டே கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக், 25. ஐ.டி.ஐ., முடித்துள்ள இவர், மங்களூரின் தனியார் மருத்துவமனை ஒன்றில், மருத்துவ உபகரணங்களை சர்வீஸ் செய்யும் பணி செய்தார்.
சில நாட்களுக்கு முன்பு, கார்காலின் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார். இங்கு இவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கார்கலா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைக்கு முன்பு, அவர் வாட்ஸாப் குரூப்பில் வீடியோ அனுப்பியுள்ளார். இதை கவனித்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, வீடியோவை ஒப்படைத்தனர். இளம்பெண்ணின் 'பிளாக்மெயிலா'ல், அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
அபிஷேக் பணியாற்றும் அதே மருத்துவமனையில், நிரீக்ஷார, 23, என்பவர் நர்சாக பணியாற்றுகிறார். இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருந்த படங்கள், வீடியோக்களை வைத்து, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து நிரீக்ஷா, அபிஷேக்கை 'பிளாக்மெயில்' செய்து, நான்கு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சுருட்டி உள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் மனம் நொந்து, அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
அபிஷேக்கை தற்கொலைக்கு துாண்டியதாக, நிரீக்ஷா உட்பட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.