/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நண்பரின் மனைவியை கொன்ற வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
/
நண்பரின் மனைவியை கொன்ற வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
நண்பரின் மனைவியை கொன்ற வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
நண்பரின் மனைவியை கொன்ற வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 07, 2025 05:14 AM
ஹெப்பகோடி : நண்பனின் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த நபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மந்திரா, 27. இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிஜோன் மண்டல், 30, என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஆறு வயதில் மகன் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, கணவரை விட்டு மந்திரா பிரிந்தார்.
பெங்களூரு, ஹெப்பகோடியின் திருபாளையாவில் வாடகை வீட்டில் தன் மகனுடன் அவர் வசித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்புரவு வேலை செய்து வந்தார். அவரது பெற்றோரும், அருகில் வசிக்கின்றனர்.
பிஜோன் மண்டல், அந்தமானில் வசிக்கிறார். அவரது நண்பர் சுமன் மண்டல், 28. அந்தமானில் பணியாற்றி வந்த சுமன், சமீபத்தில் பெங்களூரு வந்து, பெற்றோருடன் வசிக்கத் துவங்கினார்.
இவருக்கு, பிஜோனின் மனைவி மந்திரா அறிமுகமானார். அவ்வப்போது இவரது வீட்டுக்கு வந்து செல்வார்.
மந்திராவை ஒருதலையாக காதலித்த சுமன், திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதில் மந்திராவுக்கு விருப்பம் இல்லை. இதனால் இருவருக்கும் தகராறு நடந்தது.
நேற்று முன் தினம் இரவு, சுமன், மந்திராவின் வீட்டுக்கு வந்தார்.
அ ப்போது திருமணம் விஷயமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த சுமன், மந்திராவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் நடந்தபோது, மந்திராவின் மகன், தன் பாட்டி வீட்டில் இருந் தார்.
பேரனை மகளின் வீட்டுக்கு, பெற்றோர் அழைத்து வந்த போது, விஷயம் தெரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த ஹெப்பகோடி போலீசார், இருவரின் உடல்களை மீட்டு விசாரிக்கின்றனர்.