sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 16, 2025 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 05:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: கள்ளக்காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பெலகாவி மாவட்டம், கானாபுரா தாலுகாவின் பீடி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தராஜு, 30. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தில், இரண்டு குழந்தைகள் உள்ள 28 வயது பெண்ணுக்கும், ஆனந்தராஜுவுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இருவரையும் பெண்ணின் கணவர் கண்டித்தார். ஆனாலும் இருவரும் கேட்கவில்லை.

எனவே, ஆனந்தராஜு மீது நந்தகுடி போலீஸ் நிலையத்தில், பெண்ணின் கணவர் புகார் செய்தார்.

போலீசார், ஆனந்தராஜை வரவழைத்து எச்சரித்தனர். இதனால், அவர் கோபம் அடைந்தார்.

நேற்று முன் தினம் இரவு, பெண்ணின் கணவர் இல்லாததை கவனித்து, பின் வாசல் வழியாக அவரது வீட்டுக்குள் நுழைந்தார். உறக்கத்தில் இருந்த பெண்ணை, கத்தியால் வயிறு, மார்பு, முதுகு என, சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.

பின் அதே கத்தியால் தன்னை குத்திக்கொண்டார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் ஆனந்தராஜுவை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார்.

நந்தகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us