/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொடையில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி
/
தொடையில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி
ADDED : நவ 22, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர்: வனவிலங்கு வேட்டைக்கு சென்ற வாலிபர், தொடையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், மாகடி தாலுகா கெப்பேபாளையா கிராமத்தில் வசித்தவர் பாண்டுரங்கா, 35. இவர் நேற்று தனது நண்பர் கிரணுடன் சேர்ந்து, வன விலங்கு வேட்டைக்கு சென்றார்.
பன்றியை வேட்டையாட நாட்டு துப்பாக்கியால் சுட்டபோது, திருப்பி வைத்து சுட்டதால், பாண்டுரங்கா தொடையில் குண்டு துளைத்தது. அவர் உயிரிழந்தார்.

