தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியதாக ‘யூ டியூபர்’ மஞ்சு மீது வழக்கு

பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியதாக ‘யூ டியூபர்’ மஞ்சு மீது வழக்கு

பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியதாக ‘யூ டியூபர்’ மஞ்சு மீது வழக்கு


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யஷ்வந்த்பூர்: முன்விரோதத்தில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியதாக, சமூக வலைதள பிரபலம் ‘அமுக்கு டுமுக்கு’ மஞ்சு மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

பெங்களூரு யஷ்வந்த்பூரில் வசிப்பவர் மஞ்சுநாத், 27. சமூக வலைதள பிரபலமான இவர், ‘அமுக்கு டுமுக்கு’ மஞ்சு என்ற பெயரில், சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ளார். தனது வீடியோக்களை வெளியிடுகிறார்.

இந்நிலையில் மஞ்சுநாத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்ரம், 35, என்பவருக்கும் இடையில் சில மாதங்களாக முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் மஞ்சுநாத், விக்ரம் குடும்பம் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மஞ்சுவும், அவரது சகோதரர் சித்தாவும் சேர்ந்து விக்ரமை, தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து விக்ரம் அளித்த புகாரில் மஞ்சு, சித்தா மீது யஷ்வந்த்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சித்தா அளித்த எதிர்புகார் அடிப்படையில் விக்ரம் மீது வழக்குப்பதிவானது.

மஞ்சு இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ‘பப்’ சென்ற அவர், குடிபோதையில் பப்பில் பணியாற்றும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். இதுதொடர்பாகவும் அவர் மீது வழக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us