/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'பவிஷ்யா' பென்ஷன் தளத்தில் இணைந்த பேங்க் ஆப் இந்தியா
/
'பவிஷ்யா' பென்ஷன் தளத்தில் இணைந்த பேங்க் ஆப் இந்தியா
'பவிஷ்யா' பென்ஷன் தளத்தில் இணைந்த பேங்க் ஆப் இந்தியா
'பவிஷ்யா' பென்ஷன் தளத்தில் இணைந்த பேங்க் ஆப் இந்தியா
ADDED : மே 03, 2024 01:46 AM

புதுடில்லி: மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, 'பவிஷ்யா' என்னும் ஒருங்கிணைந்த ஆன்லைன் பென்ஷன் இணையதளத்தை கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது.
இந்த போர்ட்டலின் வாயிலாக, ஓய்வூதியம் தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே குடையின் கீழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வூதியம் வழங்கி வரும் வங்கிகளின் இணையதளங்கள் ஒவ்வொன்றாக பவிஷ்யா உடன் இணைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 'எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க்' ஆகியவை இணைக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், தற்போது இந்த ஒருங்கிணைந்த தளத்தில் 'பேங்க் ஆப் இந்தியா' வங்கியும் இணைந்துஉள்ளது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் பென்ஷன் வழங்கும் அனைத்து வங்கிகளும் இந்த ஒருங்கிணைந்த தளத்தில் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.