/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'நாமினி'களை 4 பேராக அதிகரிக்க வங்கிகள் சட்டத்தில் திருத்தம்
/
'நாமினி'களை 4 பேராக அதிகரிக்க வங்கிகள் சட்டத்தில் திருத்தம்
'நாமினி'களை 4 பேராக அதிகரிக்க வங்கிகள் சட்டத்தில் திருத்தம்
'நாமினி'களை 4 பேராக அதிகரிக்க வங்கிகள் சட்டத்தில் திருத்தம்
UPDATED : ஆக 04, 2024 10:31 AM
ADDED : ஆக 04, 2024 02:04 AM

புதுடில்லி:வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்கும் வகையில், வங்கிகள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது.
நாடு முழுதும் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை, 2024 மார்ச் நிலவரப்படி, 78,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பல்வேறு காரணங்களால், பணத்தை எடுக்க முடியாமல், வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதை குறைக்கும் விதமாக, வங்கிகள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள, வெள்ளியன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பார்லி.,யில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்த பின்னரே, முழு விபரம் தெரிய வரும். இருப்பினும், அதில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன.
தற்போது வங்கிகள், சேமிப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், ஒரு 'நாமினி'யை மட்டுமே நியமிக்க அனுமதி வழங்குகின்றன. இதை, நான்கு நாமினிகள் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.