/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
பேங்க் ஆப் பரோடா செயலி தடை நீக்கம்
/
பேங்க் ஆப் பரோடா செயலி தடை நீக்கம்
ADDED : மே 09, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'பேங்க் ஆப் பரோடா' வங்கி, அதன் 'பாப் வேர்ல்டு' மொபைல் செயலியில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க விதித்திருந்த தடையை, ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கியின் மொபைல் செயலியில், வாடிக்கையாளர்களை இணைப்பதில் சில குறைபாடுகள் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த அக்டோபரில் அதில் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், இக்குறைபாடுகளை வங்கி களைந்ததை அடுத்து, ஆறு மாதங்களுக்குப் பின், ரிசர்வ் வங்கி தற்போது தடையை நீக்கியுள்ளது.
இனி புதிய வாடிக்கையாளர்களை பேங்க் ஆப் பரோடா வங்கி செயலியில் சேர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது