/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
மியூச்சுவல் பண்டு திட்டத்தில் இனி மாதம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம்
/
மியூச்சுவல் பண்டு திட்டத்தில் இனி மாதம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம்
மியூச்சுவல் பண்டு திட்டத்தில் இனி மாதம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம்
மியூச்சுவல் பண்டு திட்டத்தில் இனி மாதம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம்
ADDED : செப் 03, 2024 02:31 AM
புதுடில்லி;இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவிலான முதலீட்டு தொகையில், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாதந்தோறும் 250 ரூபாய் முதலீடு செய்யக்கூடிய வகையில், மியூச்சுவல் பண்டு முதலீட்டு திட்டத்தை, 'ஆதித்ய பிர்லா' நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ.,யின் மாநாட்டில், இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் மாதவி புரி புச் இதை தெரிவித்தார்.
பங்கு சந்தையில் மாற்று வழி முதலீடாக உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் தற்போது வரை, மாதந்தோறும் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யும் தவணை திட்டங்கள் தான் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தைகள் கண்டு வரும் உயர்வால், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் அதிக லாபம் கிடைப்பதை கருதி, சிறு முதலீட்டாளர்கள் அதில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
நடுத்தர வருவாய் பிரிவினர் சிரமமின்றி மியூச்சுவல் பண்டு திட்டத்தில் சேருவதற்கு வசதியாக, குறைந்தபட்ச மாத முதலீட்டு தொகையை 250 ரூபாயாக குறைக்க, செபி தலைவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், 'ஆதித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், விரைவில் மாதந்தோறும் 250 ரூபாய் முதலீடு செய்வதற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக, அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை இல்லாத உச்சமாக கடந்த ஜூலையில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில், எஸ்.ஐ.பி., எனும் சீரான மாதத் தவணை முதலீடு 23,322 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது!