/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 35% உயர்வு
/
கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 35% உயர்வு
ADDED : மே 16, 2024 01:12 AM

சென்னை:கரூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கரூர் வைஸ்யா பேங்கின் கடந்த நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு நிகர லாபம் 34.90 சதவீதம் உயர்ந்து, 456 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதே காலகட்டத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாயும் 11.50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, 996 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டுக்கான வங்கியின் நிகர லாபம் 45.10 சதவீதம் உயர்ந்து, இதுவரை இல்லாத அளவுக்கு 1,605 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கரூர் வைஸ்யா வங்கி தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. சொத்து தரம் மற்றும் லாபத்திலும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த நிதியாண்டில் கடன் வழங்குவதற்கான செலவுகள் மேலும் குறைந்து, 65 அடிப்படை புள்ளிகளாக இருந்தது. வங்கி, தற்போது நீடித்த வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு தெரிவித்தார்.